மட்டக்களப்பு வவுணதீவு – குறிஞ்சாமுனை பகுதியில் 8 பாடசாலை மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு வவுணதீவு - கன்னங்குடா பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களே குறிஞ்சாமுனை பகுதியில் இன்று காலை குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறுஇருக்கையில், குறித்த பகுதியிலுள்ள குளவி கூடுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கையை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.