கடல் மார்க்கமாக 300 கிலோவுக்கும் அதிகளவிலான கஞ்சா போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் காவல்துறையின் சிறப்புக் குழுவினரால் குறித்த 08 பேரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு திருச்சி, கதிருப்புலம், விழுந்தமாவடி, பிரதாபராமபுரம், கல்லிமேட்டை, கோவை மற்றும் தேனி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
மேலும் இந்த கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் காவல்துறையினர் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.