சமகால அரசாங்கத்தின் செல்வாக்கு வெகுவாகக் குறைந்துள்ளதாக சில ஆய்வு குழுவினர் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் பலமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அத்தோடு அந்த ஆய்வுக் குழுவைப் பற்றி எனக்குத் தெரியும். எதிர்க்கட்சிகளின் தேவையை அந்த குழுக்கள் செய்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது. அப்போதுதான் அரசின் பலத்தை அனைவரும் பார்க்கலாம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
“ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரல் நன்றாக உள்ளது. நாங்கள் அதை பாராட்டுகிறோம். ஆனால்,மக்களுக்குச் சென்றடையக்கூடிய வகையில் நல்ல வரவு செலவுத் திட்டம் வழங்கப்படும் என நம்புகின்றோம்” என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.