நீண்டகாலமாக தற்காலிக பணியாளர்களாக உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சிறுபான்மையின வீரர்களும் இலங்கை கிரிக்கெட்டுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.