கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு

keerthi
0

 




கையடக்கத் தொலைபேசி சிம்களைப் புதுப்பிக்கும் செயற்பாட்டின் கீழ் நாடளாவிய ரீதியில் சிம்களை மீள் பதிவு சேவையை நடத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.


அத்தோடு கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் சிம்களை தங்கள் பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் அவர்களின் தேசிய அடையாள எண்ணின் கீழ் வழங்கப்படும் சிம் பற்றி அறிந்திருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


#132# என்ற எண் மூலம், தற்போது பயன்படுத்தும் தொலைபேசி நிறுவனம் தொடர்பான தகவல்களை மக்கள் பெறலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் பயன்படுத்தும் தொலைபேசி நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனத்திலும் அடையாள எண்ணின் கீழ் சிம்கள் உள்ளதா என்பதை அந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணை அழைப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.


மற்றொரு சிம் தங்களின் அடையாள அட்டையின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக அந்த சிம்களை இரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல், சிம் அட்டைகள் மூலம் ஏதேனும் முறைகேடு நடந்தால், அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும்.


அத்தோடு அதன் உண்மை நிலையினை நிரூபிக்க தங்கள் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிக்க வேண்டும்.


பயன்படுத்தும் சிம் அட்டை தங்கள் பெயரில் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்றால், தாங்கள் பயன்படுத்தும் சிம் அட்டைக்கான தொலைபேசி நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்த சிம் அட்டையை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கண்டி மாவட்டத்தின் பிரதேச செயலக அலுவலகங்களை மையமாக வைத்து சிம் அட்டை மீள்பதிவுக்கான நாடு முழுவதிலும் நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top