அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்கத்தினர் இணைந்து தற்போது கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
நிதியமைச்சினை நோக்கிச் செல்லும் லோட்டஸ் வீதியில் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச சேவையாளர்களின் கொடுப்பனவுகளை முறையாகச் செலுத்தக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பேரணியாக நிதி அமைச்சை நோக்கி செல்ல முற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, நீர்த்தாரைப் பிரயோக வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதுடன் களத்தில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.