சுகாதார அமைச்சிற்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அதன்படி, சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹீபால சுகாதார அமைச்சிற்கு புதிய செயலாளராக இவ்வாறு நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலாநிதி பாலித மஹிபால எதிர்வரும் திங்கட்கிழமை (20) பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தற்போது, சுகாதார அமைச்சின் செயலாளராக ஜனக ஸ்ரீ சந்திரகுப்த பதவி வகித்து வருகிறார்.
அத்தோடு புதிய சுகாதார செயலாளராக நியமிக்கப்படவுள்ள விசேட வைத்திய நிபுணர் கலாநிதி பாலித மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி மற்றும் சர்வதேச சுகாதார நிறுவனங்களில் பல பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.