மன்னாரில் இருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்து ஒன்று மதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்தானது நேற்று (2) மதியம் 12 மணியளவில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மதுங்குளி பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்றுக்கு வழி விடும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
எனினும் குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவ் விபத்து தொடர்பாக அப்பகுதி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.