கிரிக்கெட் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் கிரிக்கெட் வீரர்களுக்கே பாதிப்பு அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தாம் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் நிர்வாக பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் நிர்வாக பிரச்சினையால் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டை சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியுள்ளது.
இவ்வாறு இடைநிறுத்தப்படுவதனால் வருடாந்தம் கிடைக்கப்பெறும் நூறு மில்லியன் டொலர் நேரடி மற்றும் மறைமுக வருமானத்தை இழக்க நேரிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் குறிப்பாக அரசாங்கத்தின் உட்கட்சிப்பூசல்களுக்கு விளையாட்டை பயன்படுத்தி தீர்வு காண முயற்சிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.