வவுனியாவில் ஏழு கடைகளில் தொடர் திருட்டு

keerthi
0 minute read
0






வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் முன்பாகவுள்ள 7 வியாபார நிலையங்களில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  


20 ஆம் திகதி இரவு இந்த தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,


வவுனியா, கண்டி வீதியில் வன்னிப் பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக  உள்ள வியாபார நிலையங்களின் கதவுகளை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.  


மேலும் இது தொடர்பில் வியாபார நிலைய உரிமையாளர்கள் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து சிசீடீவி கமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அத்தோடு 7 கடைகளில் இடம்பெற்ற இத் திருட்டில் 50ஆயிரம் ரூபாய் வரையிலான பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top