யாழ்ப்பானம் வடமராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவர் முன்னால் மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் மகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வடமாகாணசபையின் எதிர்கட்சியினை சேர்ந்த முன்னால் மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் மகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரின் மகளே மூதாட்டியினை கழுத்து நெரித்து கொலைசெய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களை இன்று (10.11.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் (13.10.2023)ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.