பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்துக்கு அருகாமையில் உள்ள பழுதடைந்த பயணிகள் மேம்பாலத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.
எனினும் இதன்படி நேற்று முதல் கரையோர வீதியில் பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டிக்கு கரையோர வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் பம்பலப்பிட்டி தொடருந்து நிலைய வீதியிலிருந்து காலி வீதி ஊடாக கொள்ளுப்பிட்டிக்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு, கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை நோக்கி கரையோர வீதியில் பயணிக்கும் வாகனங்கள், க்ளென் ஆர்பர் பகுதியில் காலி வீதிக்கு சென்று டுப்ளிகேஷன் வீதியூடாக வெள்ளவத்தைக்கு செல்ல முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள பகுதியை தவிர, கரையோர வீதியின் ஏனைய பகுதிகளில் வாகனங்கள் பயணிக்க முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.