உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 43ஆவது போட்டி இன்று(11) இடம்பெற்றது.
எனினும் குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
எனினும் இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக டவ்ஹித் ஹ்ரிடோய் 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணியின் எடம் ஷம்பா 32 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இவ்வாறுஇருக்கையில், 307 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 44.4 ஓவர்களில் 02 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக மிட்செல் மார்ஷ் 177 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் டஸ்கின் ஹகமட் 61 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.