காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு..!

keerthi
0

 





இஸ்ரேல் இராணுவம் காசாவின் மிகப்பெரிய மருத்துமனையான அல்-ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதோடு 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


அல்-ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் முகமது அபு சல்மியா இதனை உறுதி செய்துள்ளார்.


எனினும் குறித்த தாக்குதலுக்காக இஸ்ரேலின் டாங்கர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இது குறித்து இஸ்ரேல் தரப்பில் தகவல் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் இஸ்ரேல், இந்த மருத்துவமனையை ஹமாஸ் படையினர் புகலிடமாகப் பயன்படுத்துவதாகவும் இங்கிருந்து அவர்கள் தாக்குதலைத் திட்டமிடுவதாகவும் கூறியுள்ளது.


எனினும் இந்த குற்றச்சாட்டுக்கும் மருத்துவமனை தரப்பும் அமைச்சகமும் மறுப்பு தெரிவித்துள்ளது.


அத்தோடு மருத்துமனையில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்கள் அச்சமடைந்துள்ளதோடு, தங்குவதற்கு பாதுகாப்பான இடம் எங்குமில்லை எனக் கவலை வெளியிட்டுள்ளனர்.


அத்தோடு கடந்த வார இறுதியில் இந்த மருத்துவமனை அருகில் நின்றிருந்த அவசர ஊர்திகள் மீது இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top