ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகம் பதவி விலக வேண்டும் என்ற ஒன்றிணைந்த யோசனை தொடர்பான விவாதம் தற்போது நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த விவாதம் தொடர்பான பிரேரணையை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் முன்வைத்து உரை நிகழ்த்தினார்.
கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் கருத்தை வெளியிட்டதன் காரணமாக தமக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு வாய்வார்த்தைகளால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்ச போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அநீதி இழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் உரிய வகையில் குரல் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அத்தகைய செயற்பாடுகளையே தாம் மேற்கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
இதனையடுத்து உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அரச வங்கியொன்றில் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனினும் இத்தகைய செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.