மட்டக்களப்பு மயிலுத்தமடு பண்ணையாளர்கள் விவகாரம் தொடர்பாக கள நிலவரங்களை அறிந்து கொள்வதற்காக மயிலத்த மடுவுக்குச் சென்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
மயிலத்தமடுவில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தில் இருந்த பொலிஸார் குறித்த தரப்பினரை இன்று (09.11.2023) தடுத்து நிறுத்தி அவர்களை உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை எனவும் தெற்கை தளமாக கொண்டு செயல்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெனான்டோ கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இன்றுடன் 56வது நாளாக தங்களது நில மீட்புக்கோரிய போராட்டத்தில் பண்ணையாளர்கள் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அந்தப் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக உண்மைகளை கண்டறியும் நோக்கத்துடன் தெற்கில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வந்து அதனுடைய உண்மை நிலையை அறிவதற்காக குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.