அடுத்த ஜனாதிபதியையும் மொட்டுக் கட்சியே தீர்மானிக்கும்....! எஸ்.எம். சந்திரசேன

keerthi
0




அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுஜன பெரமுன கட்சியே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.


அத்தோடு அழிவில் இருந்து மீண்டெழுந்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. எவராலும் பொதுஜன பெரமுன  கட்சியை அழிக்க முடியாது என்றும் எஸ்.எம். சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.


மொட்டுக் கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை அழிப்பதற்குச் சிலர் முற்பட்டனர். கட்சியின் ஆதரவாளர்கள் பேர வாவிக்குள் தள்ளப்பட்டனர்.


அரசியல் பிரமுகர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். எனினும், சாம்பல் மேட்டில் இருந்து மீண்டெழுந்து பயணத்தை மேற்கொண்டு வருகின்றோம்.


அத்தோடு எமது கருத்துக்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கும் நபர்கள் உள்ளனர். யார் என்ன செய்தாலும் கட்சியை அழிக்க முடியாது.



இதனையடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான சக்தி எமது கட்சிதான், அதேபோல்தான் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களிலும் பிரதான தரப்பு எமது கட்சிதான் என எஸ்.எம். சந்திரசேன  குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top