இஸ்ரேலில் பொதுமக்களை கொன்றதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஹமாசின் சிரேஷ்ட தலைவரான மவுசா அபு மர்சோக் நிராகரித்துள்ளார்.
பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு தமது அமைப்பினர் எந்த சந்தர்ப்பத்திலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களை தாக்குவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவரினால் செவ்வியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் ஆயுததாரிகள் குழந்தைகள் உட்பட பொதுமக்களை சுட்டுக்கொல்லும் காணொளி காட்சிகள் சர்வதேச செய்தி வலைப்பின்னலின் ஊடாக வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.