அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிழத்துள்ளது.
மேலும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், ரூபாவின் பெறுமதி இவ்வாறு வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளில் தெரியவந்துள்ளது.
அதேசேமயம், இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் 10.9 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.9 வீதத்தால் வலுவடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.