பிறந்தநாளில் ஸ்பெஷல் போட்டோ எடுத்த நடிகை நயன்தாரா

keerthi
1 minute read
0



மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின் தமிழ் சினிமா பக்கம் வந்து ஐயா படம் மூலம் நாயகி அவதாரம் எடுத்தவர் நடிகை நயன்தாரா.


அதன்பிறகு ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னேறி வந்தவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து வந்தார்.


டாப் நாயகியாக வளர்ந்து வந்த நேரத்தில் சொந்த பிரச்சனையால் சினிமாவில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்தார். பின் அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படம் மூலம் மீண்டும் மும்முரமாக நடிக்க தொடங்கியவர் இப்போது பாலிவுட் வரை சென்றுள்ளார்.


ஷாருக்கான்-நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.


திருமணம், குழந்தைகள் என ஜாலியாக இருக்கும் நடிகை நயன்தாரா 2 அழகு சாதன தொழில்களை வெற்றிகரமாக அண்மையில் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.


அத்தோடு விக்னேஷ் சிவன் தனது மனைவி பிறந்தநாளில் மகன், மனைவி என அனைவருடனும் எடுத்த ஸ்பெஷல் போட்டோவை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.




#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top