கோட்டை - எத்துல்கோட்டை பிரதேசத்தில் பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
மேலும் மூவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
38 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு பெண்கள் உட்பட மூவர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு ரன்ன வாடிகல மினிகிருல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் குறித்த சரியான தகவல்கள் இல்லை எனவும் அவர்கள் அதிக விலை கொடுத்து ஏழு போத்தல் மது அருந்தியது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நடந்த இடத்திற்கு கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியர் அசேல மெண்டிஸ் சென்று பரிசோதனை நடத்தினார்.