யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மாபெரும் போதை விருந்து: எழுந்த சர்ச்சை..!

keerthi
0

 



யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் அண்மையில் களியாட்டு என்னும் பெயரில் இடம்பெற்ற போதை விருந்து கொண்டாட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அத்தோடு கொழும்பை சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த நிகழ்வுக்கு சமூக வலைத்தளங்களின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளனர்.


ஆண்களுக்கு நுழைவு சீட்டு 1500 ரூபாய்க்கும் அவர்களுடன் வரும் பெண்களுக்கு 1000 ரூபாய் என விளம்பரம் செய்துள்ளனர்.


எனினும் அதன் அடிப்படையில் குறித்த தினத்தில் பல இளையோர் நுழைவு சீட்டுக்களை பெற்று பலர் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளனர்.


முன்னதாக DJ இசையுடன் ஆரம்பித்த கொண்டாட்டம் பின்னர் மது விருந்துடன் முன்னெடுக்கப்பட அதனை தொடர்ந்து கஞ்சா , ஐஸ் போன்ற போதை பொருளையும் பாவித்துள்ளனர்.


ஆனால் உணவகத்தில் மதுபானம் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், அங்கு வந்த பலரும் தம் வசம் உயிர்கொல்லி போதைப்பொருளை வைத்திருந்ததாக விருந்தில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்துள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் இவ்வாறான கலாசாச்சர சீரழிவு நிகழ்வு தொடர்பில் பலரும் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.


அத்தோடு யாழில் இவ்வாறான விருந்து கொண்டாட்டத்தை தெற்கை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்து வருவதாகவும் இவ்வாறானவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top