மேன்முறையீட்டு நீதிமன்றின் இரண்டு நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மூன்று பெயர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதற்கான மேல் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான கிஹான் குலதுங்க மற்றும் தமித் தோட்டவத்த ஆகியோரை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பரிந்துரைத்துள்ளார்.
அத்தோடு சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம், வெற்றிடத்துக்காக மூத்த பிரதி மன்றாடியார் நாயகம் மஹேன் கோபால்வாவை பரிந்துரைத்துள்ளார்.
இவற்றில் இரண்டு பெயர்களை அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதலுக்காக ஜனாதிபதி விக்ரமசிங்க சமர்ப்பிக்கவுள்ளார்.
இதேவேளை, நீதியரசர் புவெனக அலுவிஹாரே ஓய்வுபெறவுள்ள நிலையில், உயர் நீதிமன்றில் வெற்றிடமொன்று ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.