தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனை!

keerthi
0 minute read
0

 



தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனையளிப்பதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் வரையப்பட்டுள்ள புதிய சட்டமூலமொன்று அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


இதனூடாக, தமது பதவியின் கௌரவத்தை பாதுகாக்க தவறுகின்ற மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


அத்தோடு நாடாளுமன்ற தர நிர்ணய சட்டமூலம் என்ற பெயரிலான குறித்த சட்டமூலம், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி, தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுயாதீனமான குழுவொன்றின் ஊடாக தண்டனை விதிப்பதற்கு குறித்த சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


மேலும் இது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் வகையிலான ஏற்பாடுகளும் குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top