பொதுப் போக்குவரத்துக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஒரு மாத கால அனுமதி நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்தோடு அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி பொது போக்குவரத்துக்கான எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்ய இனி அனுமதி இல்லை.
அத்தோடு வாகனங்களின் தேவை, இடவசதி, எரிபொருள் செலவு, வாகன இறக்குமதிக்கான பரிவர்த்தனை தொகை போன்றவற்றில் விசேட கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.