பிரபல இந்துநாகரிக ஆசிரியரும், வவுனியா பண்டாரிக்குளம் ஐடியல் கல்வி நிலைய இயக்குனரும், முன்னாள் வவுனியா நகரசபை, உப நகர சபைத்தலைவரும், பாடசாலை ஆசிரியருமான முத்துசாமி முகுந்தரதன் இயற்கை எய்தினார்.
மேலும் மாங்குளத்தை பிறப்பிடமாகவும் வவுனியா பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட M.M.ரதன் இன்று (06/11/2023) காலமானார்.
2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின், வவுனியா நகர சபையின் தேர்தல் வெற்றியுடன் தமிழ் தேசியத்தை மீண்டு எழச்செய்து உயிர் கொடுத்தவர் என பலராலும் அறியப்பட்டவர்.
அத்தோடு செட்டிகுளம் முகாம்களில் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்ட போது, வவுனியா நகருக்குள் தனித்து நின்று துணிந்து குரல் எழுப்பியவர்.