தாமரை கோபுரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (24)மாத்திரம் சுமார் 7,522 பார்வையாளர்கள் வருகை தந்ததாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் (தனியார்) தெரிவித்துள்ளது.
அதன்படி, 7,285 உள்ளூர் பார்வையாளர்களும், 237 வெளிநாட்டு பார்வையாளர்களும் கோபுரத்தை பார்வையிட்டனர்.
2022 செப்டம்பர் 15, முதல் மொத்தம் 1,400,444 உள்ளூர் பார்வையாளர்களும் 42,297 வெளிநாட்டவர்களும் கோபுரத்தைப் பார்வையிட்டுள்ளதாக நிர்வாகம் மேலும் தெரிவித்தது.