18 ஆண்டுகளாக தலையில் இருந்த தோட்டாவை நீக்கி சாதனை..!!

tubetamil
0

 18 ஆண்டுகளுக்கு முன்பு, நப​ரொருவரின் தலையை துளைத்துக் கொண்டு சென்ற 3 சென்றி மீற்றர் அளவுள்ள தோட்டா அறுவைகிசிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

யேமனை சேர்ந்த நப​ரொருவருக்கு மண்டை ஓட்டை துளைத்துக்கொண்டு சென்ற துப்பாக்கித் தோட்டாவால், கடுமையான தலைவலி மற்றும் காதிலிருந்து நீர் ஒழுகும் பிரச்னையால் அவதிப்பட்டுவந்துள்ளார்.

யேமனில் உள்ள ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்த இவர் தனது 6 சகோதரர்கள், 3 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். ஒருநாள், அவர்கள் வாழ்ந்து வந்த பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த சண்டையில் இவரது தலையை துப்பாக்கிக் தோட்டா துளைத்துவிட்டது. அதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்குச்  சென்ற போது அங்கு முதலுதவி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

அவரது தலைக்குள் காதுக்கு அருகே துளைத்திருந்த தோட்டாவின் முனை, மண்டை ஓட்டுக்குள் சிக்கியிருந்துள்ளது இவ்வாறே 18 ஆண்டு காலம் கடந்த நிலையில் , பெங்களூருவில் இருக்கும் அவரது நண்பர்கள் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. 

இந்தியா வந்த அவரை மருத்துவர்கள் பரிசோதித்து எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து, துல்லியமாக தோட்டா இருக்கும் இடத்தை அறிந்துகொண்டனர். பின்னர் அவர் தலையில் அறுவைசிகிச்சை செய்து துப்பாக்கித் தோட்டா தலையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.  

இது குறித்து மருத்துவர்கள், “பெரும் சவாலாகவே இந்த அறுவைசிகிச்சை இருந்தது. எதிர்பார்த்ததைப் போல தோட்டாவை அகற்றிதும் கடுமையான ரத்தப்போக்கு ஏற்படாததே மிகப்பெரிய வெற்றியாகப் உள்ளது” என தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top