ஜனவரி முதலாம் திகதி முதல் பொருட்களின் விலைகள் 2 முறையில் அதிகரிக்கும்

keerthi
0

 



ஜனவரி முதலாம் திகதி முதல் தற்போதுள்ள VAT அதிகரிப்பால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை இரண்டு வழிகளில் அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வு நிறுவனமான அட்வகாட்டா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

எனினும்   இதன் காரணமாக ஒட்டுமொத்த பணவீக்கம் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அரசாங்கம் கணித்துள்ளது. 

அதற்கமைய, VAT அதிகரிப்புடன் ஒப்பிடும்போது அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டண அதிகரிப்பு அதிகமாக உள்ளது. 

 அத்தோடு மருந்துகள், கோதுமை மாவு, குழந்தை பால் மா போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை. எனினும் பெற்றோல், டீசல் 60 ரூபாவினால் அதிகரிப்பதால், போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பினால் சில உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.

மின்சாரக் கட்டணத்திற்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், டீசல் மூலம் உற்பத்தி செய்யப்படும் போது மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top