அடையாளம் தெரியாத 2
ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூகுண விகாரைக்கு மேலே உள்ள ஏரிக்கு அருகில் நேற்று (27) காலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், ஆனால் அவர் 45-50 வயது மதிக்கத்தக்க, 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர் மேலே ஊதா நிற சட்டையும், ஆரஞ்சு மற்றும் ஊதா கலந்த சாரமும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல புகையிரத கடவைக்கு அருகில் உள்ள மா ஓயாவில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிடைத்த தகவலின் அடிப்படையில் ரம்புக்கனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.