50 வயதிலும் இளம் போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கும் விசித்ரா பிக்பாஸில் வாங்கும் சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

tubetamil
0

 வருடா வருடம் வெற்றிகரமாக ஓடும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வருடமும் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி படு மாஸாக ஒளிபரப்பாக தொடங்கியது.

இதில் நாம் எதிர்ப்பார்த்த போட்டியாளர்களும், எதிர்ப்பார்க்காதவர்களும் கலந்துகொண்டனர்.

அப்படி பிக்பாஸில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பிரபலம் தான் நடிகை விசித்ரா. 90களில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட இவர் பொற்கொடி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.அதன்பிறகு அவள் ஒரு வசந்தம், சின்னத்தாயே, தலைவாசல், தேவர்மகன், ஏழாம் இடம், அமராவதி, சபாஷ் பாபு, வீரா போன்ற படங்களில் நடித்தவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்தார்.

தமிழில் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விசித்ரா, சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள விசித்ரா ஒரு நாளைக்கு ரூ. 40,000 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றுள்ளாராம்.

பிக்பாஸ் 7 போட்டியாளர்களில் அதிக சம்பளம் பெறும் போட்டியாளர் இவர் தான் என கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top