இந்தியாவில் இருந்து மேலும் 6 மில்லியன் முட்டைகள் நாட்டிற்கு இன்று கொண்டுவரப்படவுள்ளன என அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
குறித்த முட்டைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சந்தைக்கு விநியோகிக்கவுள்ளன என அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியான முட்டை இறக்குமதியினால், சந்தையில் முட்டைகளின் விலைகள் குறைவடைந்து வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.