இந்தியாவில் இருந்து 6 மில்லியன் முட்டைகளுடன் மற்றொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் நாளை (31.12.2023) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (04) நாடு பூராகவும் உள்ள ச.தொ.ச வர்த்தக நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பண்டிகை காலங்களில் முட்டையின் விலை உயர்வால் இந்தியாவில் இருந்து முட்டைகளை தொடர்ந்தும் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது
மேலும் அடுத்த வருட (2024) இறுதிக்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.