பிக்பாஸ் 7
விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பின் உச்சமாக 80 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது.
அண்மையில் Freeze Task வந்தது, போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வருவதற்குள் போட்டியாளர்கள் எப்படி நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ரச்சிதா சப்போர்ட்
கடந்த 6வது சீசனில் சீரியல் நடிகை ரச்சிதா பங்குபெற்றிருந்தார், இந்த 7வது சீசனில் அவரது கணவர் தினேஷ் பங்குபெற்றுள்ளார்.
இருவரும் சில காரணங்களால் தற்போது பிரிந்து இருக்கின்றனர், தினேஷ் தனது மனைவி பற்றி நிகழ்ச்சியில் பேசினாலும் ஆனால் ரச்சிதா இதுவரை அவர் குறித்து பேசியதே இல்லை.
இந்த நிலையில் ரச்சிதா தனது இன்ஸ்டாவில் விசித்ரா பற்றி பதிவு போட்டுள்ளார். எனவே ரசிகர்கள் ரச்சிதா அவரது கணவரை சப்போர்ட் செய்யவில்லை, இனி அவருடன் சேரும் எண்ணம் நடிகைக்கு இல்லை என்பது இதில் இருந்து நன்றாக தெரிகிறது என கமெண்ட் செய்கிறார்கள்.