இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 80 இலட்சம் முட்டைகள் லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை, அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு தேவையான முட்டையை கொள்வனவு செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 300,000,000 முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.