புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவரை நேற்று (29.12.2023) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கைவேலி பகுதியிலுள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலைக்கு அருகாமையில் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் 8 பைக்கற்றுக்களில் 15 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞனை கைது செய்துள்ளதாகவும் குறித்த ஐஸ் போதைப்பொருள் 80,000 ரூபா பெறுமதியுடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனை உடமையில் வைத்து விற்பனை செய்ய தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான (70537) குணவர்த்தன, (72485) ஜெயசூர்ய,
(90945) தனுஸ்ராஜு,
(88582) ஜெனன் ஆகிய பொலிஸ் குழுவினரால் இவ் நடவடிக்கை முறியடிக்கப்பட்டிருந்தது