இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டால் காசாவில் மேலும் பலர் உயிரிழக்கக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
அத்துடன், காசாவின் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, தெற்கு லெபனானில் மேலும் இரண்டு ஹிஸ்புல்லா படையினரின் தளங்கள் தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.