பண்டிகை காலங்களில் விருந்துகளுக்கு செல்பவர்கள் சாரதியை அழைத்துச் செல்லுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறு சாரதி இல்லாத பட்சத்தில் வாடகை வாகனத்தில் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் நாளாந்தம் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் 21312 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துகளில் 2163 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 5296 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
அத்தோடு இம்மாதம் கடந்த 4 நாட்களில் 2427 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 232 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.