வடக்கு - கிழக்கில் இன்று முதல் கனமழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

keerthi
0

 



வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் இன்று(15.12.2023) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும்  கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 அத்தோடு    காற்றுச் சுழற்சியானது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளதாகவும் இதன் நகர்வுப் பாதை தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னரே உறுதியாகக் கூற முடியும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 மேலும்   இந்தக் காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top