நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பெந்தோட்டை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் டிட்டோ வட்லோவ் என்ற 51 வயதான கஸகஸ்தான் நாட்டை சேர்ந்தவராகும்.
நீரில் மூழ்கி பலி
கிறிஸ்மஸ் தினத்தன்று இலங்கைக்கு வந்திருந்த அவர், பெந்தோட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
நேற்று அவர் தனது மனைவியுடன் கடலில் நீராடச் சென்ற போது விபத்திற்குள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.