நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களுக்கு இன்று(29) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், விரிவுரைகள் உள்ளிட்டவற்றிற்கு இன்று முதல் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக மாதிரி வினாக்களை விநியோகித்தல் மற்றும் மாதிரி வினாக்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.