போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு எந்தவொரு அழுத்தங்கள் வந்தாலும், ஒரு அடி கூட பின்வாங்கப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வடக்கு மோதரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (20) பிற்பகல் முத்துவெல்ல விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதன்போது, அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.