பிரித்தானியா செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரிவோல்வர், 10 ரவைகள், ரம்போ ரக கத்தி மற்றும் 05 தோட்டாக்களுடன் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு செல்ல வந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் இவ்வாறான துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை வான்வழியாக எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அவற்றை எடுத்துச் செல்வது அவசியமானால், இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சட்டப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.