கொழும்பில் மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 22 வயதுடைய பிரித்தானிய பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மது அருந்தி வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் அவர் மீது குற்றஞ்சாட்டப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.