சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் தங்கியுள்ள ஏதிலிகள் முகாம்களை நோக்கி இஸ்ரேலிய படையினர் முன்னேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், தொடர்ந்தும் இஸ்ரேல் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தி வருவதாக ஹமாஸின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.