கந்தானை செபஸ்டியன் மாவத்தையில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் உயிரிழந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
அதன்படி, வீட்டின் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், வீட்டை திருடர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில், வீட்டின் ஜன்னல்களில் மெல்லிய மின் கம்பிகள் இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை எனவும் சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.