விருந்துபசாரத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு..!!

tubetamil
0
அங்கொட - வல்பொல பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.

வல்பொல - விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர்; தெரிவித்தனர்.

குறித்த நபர் மேலும் மூவருடன் இணைந்து இந்த விருந்துபசாரத்தை நடத்தியுள்ளதாகவும், அதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வல்பொல பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மாரவில - ஜாகொடவத்த பிரதேசத்தில் நேற்றிரவு 34 வயதுடைய நபரொருவர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டடுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top