விடுதலை படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

keerthi
0


நகைச்சுவை நடிகராக இருந்த சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் அதன் விடுதலை .

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானி ஸ்ரீ, ராஜிவ் மேனன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர்.

மாபெரும் வெற்றியடைந்த இப்படம் உலகளவில் வசூல் சாதனையை படைத்தது. இந்நிலையில், இப்படத்தின் மொத்த பட்ஜெட் குறித்து சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.

இதில் முதன் முதலில் இப்படத்தை ஆரம்பிக்கும் போது ரூ. 4.5 கோடி தான் பட்ஜெட் ஆக இருந்ததாம். 35 நாட்களுக்குள் இப்படத்தை முடித்துவிடலாம் என எண்ணியுள்ளார் வெற்றிமாறன். 

ஆனால், அவர் நினைத்தது போல் நடக்கவில்லை. முதற்கட்ட படப்பிடிப்பிலேயே 10 சதவீதம் தான் எடுக்க முடிந்ததாம். அதுவும் 20 நாட்களில் 10% சதவீத படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ள நிலையில் கிட்டதட்ட 70% சதவீத பட்ஜெட் முடிந்துவிட்டது.

இதன்பின் இயற்கை ரீதியாக நடந்த பிரச்சனை காரணமாக ஏற்கனவே படப்பிடிப்பு நடந்த இடத்தில் வெற்றிமாறனால் படத்தை எடுக்க முடியவில்லை. அதனால் வேறொரு இடத்திற்கு படப்பிடிப்பை மாற்றியுள்ளார்.

அங்கு சென்றதும் கதைக்காக அதிகமாக எழுத துவங்கிவிட்டாராம். இதன்பின் விஜய் சேதுபதி படத்திற்குள் வந்துள்ளார். இறுதியாக 35 நாட்களில் முடியவிருந்த படப்பிடிப்பு 120 நாட்களில் முடிந்ததாம்.

இதனால் முதல் பாகத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ. 65 கோடியாக மாறியுள்ளது. விடுதலை இரண்டு பாகங்களாக பிரிய இதுவும் ஒரு காரணம் ஆகும். 

மேலும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் இருப்பதாகவும் அந்த பேட்டியில் வெற்றிமாறன் கூறியுள்ளார். வெற்றிமாறன் இப்படி கூறியவுடன் பேட்டியில் கலந்துகொண்ட மற்ற பிரபலங்களும் ஷாக்காகிவிட்டனர். 




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top