ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஏவுகணைகளை மீண்டும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

keerthi
0



 இஸ்ரேல் ராணுவம்-காசாவின் ஹமாஸ் ஆயுதக்குழு இடையிலான போா் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிது. இந்த விவகாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கும் மற்றொரு அமைப்பு ஹவுதி.

செங்கடலில் இஸ்ரேலை நோக்கிப் பயணிக்கும் அல்லது இஸ்ரேலிலிருந்து பயணிக்கும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்திருப்பவர்கள் ஏமனை தலைமையிடமாக கொண்ட இந்த ஹவுதி கிளா்ச்சியாளா்கள்.

 அத்தோடு    உலகின் பிரதான கிழக்கு-மேற்கு வா்த்தக வழித்தடமாக செங்கடல் அமைந்துள்ளது. இந்தச் செங்கடலில் வா்த்தக கப்பல்கள் மீது ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் சூயஸ் கால்வாயை அணுகுவது பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.

சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவுடன் ஐரோப்பாவையும், வட அமெரிக்காவையும் இணைக்கும் முக்கிய வா்த்தகப் பாதையை ஹவுதி அமைப்பினா் சீா்குலைத்துள்ளனா். இந்தப் பாதையையே பல கப்பல்கள் தவிா்க்கத் தொடங்கியுள்ள நிலையில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வுக்கும் வழிவகுத்துள்ளது.

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் செங்கடல் பகுதியைக் கடந்த ஒரு கப்பல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் உள்ளிட்ட தாக்குதல்களை ஹவுதி அமைப்பினா் நடத்தினர். அதனை முறியடிக்கும் விதமாக அமெரிக்க ராணுவப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்தது.

இவ்வாறுஇருக்கையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணையை அமெரிக்க ராணுவப் படை சுட்டு வீழ்த்தியது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top