தற்போது சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் எதிர்நீச்சல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் மாரிமுத்து மறைவுக்கு பிறகு ஆதி குணசேகரன் ரோலில் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார்.
தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டதால் தற்போது எதிர்நீச்சல் தொடரின் ரேட்டிங் சற்று குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் புது எண்ட்ரியாக டி.கே.கலா நடிக்க இருக்கிறார். ஜனனியின் அப்பத்தா ரோலில் தான் டி.கே.கலா நடிக்கிறார்.
விஜய் நடித்த கில்லி படத்தில் முத்துபாண்டியின் அம்மாவாக நடித்தவர் தான் டி.கே.கலா என்பது குறிப்பிடத்தக்கது.